Monday, April 23, 2007

தப்பிய தேனீக்கள்- மீள் பதிவு

வலை உலகில் கடந்த சில நாட்கலாகவே அல்லோலம் பட்டுக்கொண்டிருக்கும் விஷயம். போலி பதிவர் குறித்து.

சல்மா அயூப் என்ற பெயரில் எழுதிய ஒர் ஆண் பதிவர். அதுவும் இஸ்லாத்தை சாராதவர் ஒரு பெண்பதிவரின் பெயரில் போலி பக்கத்தினை திறந்து, பின்னூட்டங்கள் போட்டு மாட்டிக்கொண்டார். அந்த பதிவரை சில அமுக(?!) பதிவர்கள் பொறி வைத்து பிடித்து விட்டனர். விஷயத்தை அம்பலப்படுத்தி, தவறு செய்தவரிடம் எழுதியும் வாங்கி ஆபர்ரேசனையும் முடித்து விட்டார்கள்.

நான் எல்லாவற்ரையும் பொறுமையாக படித்து வந்தேன். சம்பந்தப்பட்ட பெண்பதிவரோ, அல்லது ஆபரேசன் செய்த பதிவரோ அந்த சல்மா அயூப் இன்னாரென்று எங்கேயும் குறிப்பிட வில்லை. பின் எப்படி எல்லோரும் ஜயராமன்(ஜெயராமன் எது சரி?!) என்று குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்பதும் விளங்க வில்லை. சரி அவர் யார் என்று தேடி அவர் பக்கத்துக்கு போனால்.. அங்கேயும் ஒரு சத்தத்தையும் காணவில்லை. அமைதியாக இருக்கிறது அவர் பதிவுகள்.

இது இப்படி என்றால்..

சல்மா அயூப் என்ற பதிவு தேன்கூடு, தமிழ்மணம் இரண்டிலும் திரட்டப்பட்டிருக்கிறது. அதற்கான சுட்டியை சொடுக்கினாலே தெரிந்து விடும். இந்த இரண்டு திரட்டிகளிலும் பதிவர் குறித்த விபரங்கள் நிச்சயம் இருக்கும். தமிழ்மணம் இல்லை என்று சொன்ன போதும் அதன் மீது குற்றம் சாட்டும் நபர்களுக்கு ஏன் தேன்கூடு மீது சந்தேகம் வரவில்லை.

நியாயமாகப் பார்த்தால் இரண்டு திரட்டிகள் மீதும் சந்தேகம் வந்திருக்கவேண்டும். அப்படி இல்லாமல் தேன்கூடு மட்டும் சீனில் வராமல் ஓதுங்கிக்கொண்டது எப்படி? அல்லது இவர்கள் அதை ஒதுக்கியது எப்படி?

தேன்க்கூடு நிவார்கிகளுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக ஏன் சந்தேகம் வரக்கூடாது...?

இது மாதிரியான கேள்விகள் எனக்கே வரும் போது பழைய பதிவர்களுக்கு ஏன் வரவில்லை.?

மேலும் உண்மைத்தமிழன் என்பவர் அந்த போலி பக்கத்தை தேன்கூடு தளத்தில் பார்த்ததாகவும்,(தனிப்பதிவு போட்டு சொல்லி இருக்கிறார்) அவர் புகார் கொடுத்த பின் அந்த பதிவு நீக்கப்பட்டாதாகவும் சொல்கிறாரே.., விசயம் முன்னமே தெரிந்த தேன்கூடு, ஏன் பாதிக்கப்பட்ட பெண்பதிவருக்கு ஒரு தகவல் கூட கொடுக்க வில்லை என்று யாராவது கேட்டீர்களா?

சந்தேகம் என்று வந்து விட்டால் அது நியாயமானதாக இருக்க வேண்டும் ஒரு சார்புடையதாக இருக்கக்கூடாது. இணையத்தில் உலவும் போலி பிரச்சனைகளால் எல்லோருமே மன உலைச்சலுக்கு ஆளாகி, பயந்து பயந்து பதிவு போடும் நிலையில் ஒரு பெண்பதிவரின் பெயரில் போலி பக்கம் இருப்பதை அறிந்த திரட்டி, பதிவருக்கு மனிதபிமான அடிப்படையிலாவது தகவல் கொடுத்திருக்க்கலாமே? என்று கூட யாரும் யோசனை செய்ய மறுப்பது ஏன்?

மிரட்டப்பட்டதாக இவர்களால் சொல்லப்படும் அந்த நபர் ஏன் இது வரை காவல் துறையை அணுகவில்லை..?

இப்படி ஏகத்துக்கும் கேள்விகள் இருக்க.. கூச்சல் மட்டும் நிறைந்து வருகிறதே ஏன்?

இன்றோ, நாளையோ பதிவு போட்டு திட்டிய அப்பதிவர்கள் பின்னூட்டங்கள் வாயிலாக தாங்களோ(அனானியாக) கூட தேன்கூடு மீதான சந்தேகத்தை கிளப்புவார்கள் என்று நம்புகிறேன்.
(இந்த பதிவின் தேதி, நேரத்தை குறித்துக்கொள்ளவும்)
டிஸ்கி:-

நான் தேன்கூடு திரட்டியில் இன்னும் இணைய வில்லை.

16 comments:

said...

சோதனை..
எனக்குத்தான் பின்னூட்டமே வரவில்லையே!

said...

// தமிழினியன் said...

சோதனை..
எனக்குத்தான் பின்னூட்டமே வரவில்லையே! //

present sir

said...

சந்தோஷமா..?!

said...

:)

நன்றி

said...

உங்கள் கேள்விகள் நியாயமானதே...அதற்கு எந்த பன்னாடைகளும் பதில் சொல்ல வர மாட்டார்கள் நான் உட்பட....:)))

முக்காடு போட்டு மூக்குபொடி போடும் ராமராயன் ஒழுங்கு மரியாதையாக நடந்து கொள்வது நல்லது...இல்லாவிட்டால்...அதுவும்நல்லது தாம்பா

:-))

said...

உங்கள் கேள்விகள் நியாயமானதே,பதில்தான் சொல்ல மாட்டார்கள்!!

said...

//தமிழினியன் said...
சோதனை..
எனக்குத்தான் பின்னூட்டமே வரவில்லையே!//


me also present sir.... :)

said...

கேள்விகளுக்கு பதில் கிடைக்கலையே? :(

said...

மாட்டிக்கொண்டவர் புனித பிம்பத்துக்காக வைதிக ஸ்ரீயாகவும் தனக்குப் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால் இஸ்லாம் பற்றி மனம்பிறழ்ந்த நிலையிலும் எழுதிவந்தவர். தனிமனிதர் மீதும் தன் மனம்பிறழ்ந்த நிலையைக் காண்பித்து மாட்டிக்கொண்டு விட்டார்.

உங்கள் கேள்விகள் நியாயம் தான்.
மேலும் கேள்விகள் இருக்கின்றன..
அவருடைய எழுத்தில்,கருத்தில், இனத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக அவரை காப்பாற்றும் நோக்கில் பிரச்னையை திசைத்திருப்பி 'தமிழ்' மணத்திலிருந்து வெளியேறுகிறார்களே தவிர, இப்பிரச்னையின் நியாயத்தை ஏன் பேசுவதில்லை? தங்கள் வீட்டுப் பெண் பதிவருக்கு இதுபோல் நடந்திருந்தாலும் இப்படித்தான் 'ஆறாத' இனப்பாசம் பொங்குமா?

said...

இது போன்ற கேள்விகளை கேட்டால் நீங்கள் ஒரு

அ) தேச விரோதி
ஆ) திராவிட பெத்தடின் உட்கொண்ட ஆசாமி
இ) கம்யூனிஸ்ட்
ஈ) இந்து மத எதிர்ப்பாளர்
உ) முஸ்லிம் ஜிகாதி

said...

கேள்வி, பதில் என்பதை விட முன்முடிவுகளே இங்கே எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக உள்ளது.



பதிலை எதிர்பார்ப்பதை விட தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்போம்.. தொடர்ந்து கேள்விக்குள்ளாவதே சில தவறுகள் நடப்பதை தடுக்கக் கூடும்.

said...

//லிவிங் ஸ்மைல் said...
கேள்வி, பதில் என்பதை விட முன்முடிவுகளே இங்கே எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக உள்ளது.



பதிலை எதிர்பார்ப்பதை விட தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்போம்.. தொடர்ந்து கேள்விக்குள்ளாவதே சில தவறுகள் நடப்பதை தடுக்கக் கூடும்.//

சரியான கமெண்ட்

சென்ஷி

Anonymous said...

என்னை பொருத்தவரை, சரியோ தவறோ... ஒரு சாராரை நீக்கியது/அவர்களாகவே நீங்கியது, தமிழ்மணத்திற்கு பின்னடைவே...

இருவரும் தமிழ்மணத்தில் இருந்ததால் தான் என் போன்றோர் இருசாராரின் கருத்துக்களையும் அறிய முடிந்தது....சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருந்தாலும் அதை தமிழ்மணம் சரியாக Handle செய்யவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது...

இதுவரை பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டு வந்தன.. பல அரிய கருத்துக்கள் அறிய வந்தன..அவசரபடாமல்...உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் ஏற்பட்டு இருக்கும் இழப்பு புரியும்.. இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..
விவாதங்கள்/எதிர்கருத்துக்கள் இல்லாமல் எந்தக் கருத்தும்/வாதமும் முழுமை அடைய போவதில்லை...

இப்பொழுதே. கடந்த சில நாட்களாக வாசகர் பரிந்துரை பக்கம் சென்று பார்த்தால்.. திராவிட பதிவுகளும், இஸ்லாமிய பதிவுகளும் தான் பெரும்பான்மையாக உள்ளன.. ஒரு பக்க கருத்துக்களே முதன்மை பெறுவது ஆரோக்கியமற்ற சூழல்.


உங்களுடைய வாதங்களை சோதனைக்குட்படுத்தி எதிர் தரப்பினர் பலருடன் விவாதித்து முடிவில் நீங்கள் உங்கள் கருத்தில் வெற்றி பெறும் போது கிடைக்கும் சந்தோஷம், பெருமை, கவுரவம் இனி உமக்கு வாய்க்கப்போவதரிது...

இதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு பக்க ஆட்டமே வெற்றி என நினைத்தால் சொல்வதுற்கு ஏதுமில்லை...நன்றி

said...

அநானி.. கடைசியில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். அனேகர் பதிவிலும் இப்படியே சொல்லிக்கொண்டு போனால் என்ன அர்த்தம்..?!

said...

/// தமிழினியன் said...
அநானி.. கடைசியில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். அனேகர் பதிவிலும் இப்படியே சொல்லிக்கொண்டு போனால் என்ன அர்த்தம்..?! ///

அதனை ஒரு ஸ்பேமாக கருதி ஒதுக்கிவிட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து

Anonymous said...

தமிழினியன்,

சம்பந்தப்பட்ட பெண் பதிவர் அமைதியாக இருக்கிறார். தவறு செய்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுதிக் கொடுத்தவரும் அமைதியாகிவிட்டார். சிபிஐ-க்கே சவால் விட்டுப் பிடித்தவர்களும் அமைதியாக இருக்கிறார்கள். தேன்கூடும் அமைதி காக்கிறது.. வலையுலகமும் இப்போது இதை கிட்டத்தட்ட மறந்து அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்கிவிட்டார்கள். இப்போது மீண்டும் இதை எதற்குக் கிளற வேண்டும்..?

உங்களது கேள்வி நியாயமானது என்றாலும் அவர்கள் தானே முன் வந்து தீர்த்து வையுங்கள் என்று கேட்டால் ஒழிய நாம் முந்தக்கூடாது.. பிரச்சினை திசை திரும்ப வாய்ப்புண்டு.. இத்தோடு விட்டு விடுங்கள்..

நீங்களே யோசித்துப் பாருங்கள்.. இதற்கு முன் ஒரு பதிவைப் போட்டு அதில் பின்னூட்டம் இட யாருக்கும் விருப்பமில்லாமல் மூன்று நாட்கள் வெறுமனே இருந்ததுதானே.. அதற்கும் ஒரு புதிய பதிவைப் போட்டீர்கள். அதன் பின்புதான் நீங்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக நண்பர்களும், நண்பிகளும் இங்கு வந்திருக்கிறார்கள்..

இப்போதைக்கு பேசக்கூடிய விஷயம்தான் என்றால் இந்நேரம் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தின் எல்லையைத் தாண்டியிருக்கும். ப்ளீஸ்.. புரிந்து கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்..