Friday, August 31, 2007

போலிப் பிரச்சனை இவர்களின் நிலை என்ன?

தலை தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் போலிப் பிரச்சனையை சற்று உற்று நேக்கி வருகின்றவர்களில் நானும் ஒருவன்..

தமிழ் இணையத்தை சுத்தமாக்கும் முயற்சிகளில் சில பதிவர்கள்.. திடீரென குதித்து இருப்பது எந்த சந்தேகத்தையும் வரவழைக்காமல்.. மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கிறது.

பலரும் ஒருவரை குற்றம் சாட்டியபடி இருக்க.. இன்னொருவர் //அது திராவடப் போலியாக இருந்த போதும், பார்ப்பன ஆரியப் போலியாக இருந்த போதும்// என்று குண்டைப்போடுகிறார். இது பற்றி மற்றவர்கள் யாரும் வாய் திறக்காமலிருப்பது எவ்வளவு ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறதோ.. அதே அளவு மன்னிக்கவும், அதைவிட ஆச்சரியத்தை உண்டு பண்ணுவது சிலரின் மௌனம்!

இவர்கள் பதிவுகள் வாயிலாக தங்கள் கருத்துக்களை பதிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
இப்படி நான் கேட்பதால் என்னையும் கூட போலியின் அடியாள் என்றோ, கையாள் என்றோ சொல்லிவிடக்கூடும் என்று அச்சம் நிலவுகிறது. ( எப்படி.. பிராமண எதிர்ப்பை கடைபிடிப்பவர்கள் எல்லோரும் போலியின் கையாள் என்று பரப்பப்பட்டதோ.. அதே போல இதுவும் பரப்பப்படலாம்..)

1. பொட்டீக்கடை.
2. வரவணையான்.
3. சுகுணா திவாகர்.
4. முத்து தமிழினி
5. முத்துக்குமரன்.
6. டி.பி.ஆர். ஜோசப்.
7. நண்பன் ஷாஷி
8. பரஞ்சோதி
9. தமிழச்சி


ஆகியோர்.. தங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
(இவர்களில் சிலர் பார்ப்பணிய எதிர்ப்பாளர்கள், சிலர் முத்தமிழ்மன்றத்தில் இயங்கும் பதிவர்கள், சிலர் இந்துமாத வெறிக்கு எதிரானவர்கள்{போலி சிலசமயம் இஸ்லாமியர்கள் போல சொற்கள் பயன்படுத்துவதுண்டு}..

மேற்கண்ட பதிவர்கள் தொடர்ந்து அமைதி காக்கும் நிலையில் உண்மையான போலியின் கைக்கூலி இவர்கள் என்று எண்ணவும் வாய்ப்பு இருக்கிறது. :(