Monday, April 23, 2007

பதில் சொல்லச்சொல்லுங்கள்..

ஏதோ எனக்கு தோன்றியதை ஒரு பதிவாக எழுதி.. சில சந்தேகங்களை முன் வைத்தேன். ஆனால் குறை சொல்லித்திரியும் நபர்கள் யாருமே பதில் சொல்ல வில்லை..
யாராவது.. விசாரித்துச் சொல்லச்சொல்லுங்கள்.

தப்பிய தேனீக்கள்- மீள் பதிவு

வலை உலகில் கடந்த சில நாட்கலாகவே அல்லோலம் பட்டுக்கொண்டிருக்கும் விஷயம். போலி பதிவர் குறித்து.

சல்மா அயூப் என்ற பெயரில் எழுதிய ஒர் ஆண் பதிவர். அதுவும் இஸ்லாத்தை சாராதவர் ஒரு பெண்பதிவரின் பெயரில் போலி பக்கத்தினை திறந்து, பின்னூட்டங்கள் போட்டு மாட்டிக்கொண்டார். அந்த பதிவரை சில அமுக(?!) பதிவர்கள் பொறி வைத்து பிடித்து விட்டனர். விஷயத்தை அம்பலப்படுத்தி, தவறு செய்தவரிடம் எழுதியும் வாங்கி ஆபர்ரேசனையும் முடித்து விட்டார்கள்.

நான் எல்லாவற்ரையும் பொறுமையாக படித்து வந்தேன். சம்பந்தப்பட்ட பெண்பதிவரோ, அல்லது ஆபரேசன் செய்த பதிவரோ அந்த சல்மா அயூப் இன்னாரென்று எங்கேயும் குறிப்பிட வில்லை. பின் எப்படி எல்லோரும் ஜயராமன்(ஜெயராமன் எது சரி?!) என்று குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்பதும் விளங்க வில்லை. சரி அவர் யார் என்று தேடி அவர் பக்கத்துக்கு போனால்.. அங்கேயும் ஒரு சத்தத்தையும் காணவில்லை. அமைதியாக இருக்கிறது அவர் பதிவுகள்.

இது இப்படி என்றால்..

சல்மா அயூப் என்ற பதிவு தேன்கூடு, தமிழ்மணம் இரண்டிலும் திரட்டப்பட்டிருக்கிறது. அதற்கான சுட்டியை சொடுக்கினாலே தெரிந்து விடும். இந்த இரண்டு திரட்டிகளிலும் பதிவர் குறித்த விபரங்கள் நிச்சயம் இருக்கும். தமிழ்மணம் இல்லை என்று சொன்ன போதும் அதன் மீது குற்றம் சாட்டும் நபர்களுக்கு ஏன் தேன்கூடு மீது சந்தேகம் வரவில்லை.

நியாயமாகப் பார்த்தால் இரண்டு திரட்டிகள் மீதும் சந்தேகம் வந்திருக்கவேண்டும். அப்படி இல்லாமல் தேன்கூடு மட்டும் சீனில் வராமல் ஓதுங்கிக்கொண்டது எப்படி? அல்லது இவர்கள் அதை ஒதுக்கியது எப்படி?

தேன்க்கூடு நிவார்கிகளுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக ஏன் சந்தேகம் வரக்கூடாது...?

இது மாதிரியான கேள்விகள் எனக்கே வரும் போது பழைய பதிவர்களுக்கு ஏன் வரவில்லை.?

மேலும் உண்மைத்தமிழன் என்பவர் அந்த போலி பக்கத்தை தேன்கூடு தளத்தில் பார்த்ததாகவும்,(தனிப்பதிவு போட்டு சொல்லி இருக்கிறார்) அவர் புகார் கொடுத்த பின் அந்த பதிவு நீக்கப்பட்டாதாகவும் சொல்கிறாரே.., விசயம் முன்னமே தெரிந்த தேன்கூடு, ஏன் பாதிக்கப்பட்ட பெண்பதிவருக்கு ஒரு தகவல் கூட கொடுக்க வில்லை என்று யாராவது கேட்டீர்களா?

சந்தேகம் என்று வந்து விட்டால் அது நியாயமானதாக இருக்க வேண்டும் ஒரு சார்புடையதாக இருக்கக்கூடாது. இணையத்தில் உலவும் போலி பிரச்சனைகளால் எல்லோருமே மன உலைச்சலுக்கு ஆளாகி, பயந்து பயந்து பதிவு போடும் நிலையில் ஒரு பெண்பதிவரின் பெயரில் போலி பக்கம் இருப்பதை அறிந்த திரட்டி, பதிவருக்கு மனிதபிமான அடிப்படையிலாவது தகவல் கொடுத்திருக்க்கலாமே? என்று கூட யாரும் யோசனை செய்ய மறுப்பது ஏன்?

மிரட்டப்பட்டதாக இவர்களால் சொல்லப்படும் அந்த நபர் ஏன் இது வரை காவல் துறையை அணுகவில்லை..?

இப்படி ஏகத்துக்கும் கேள்விகள் இருக்க.. கூச்சல் மட்டும் நிறைந்து வருகிறதே ஏன்?

இன்றோ, நாளையோ பதிவு போட்டு திட்டிய அப்பதிவர்கள் பின்னூட்டங்கள் வாயிலாக தாங்களோ(அனானியாக) கூட தேன்கூடு மீதான சந்தேகத்தை கிளப்புவார்கள் என்று நம்புகிறேன்.
(இந்த பதிவின் தேதி, நேரத்தை குறித்துக்கொள்ளவும்)
டிஸ்கி:-

நான் தேன்கூடு திரட்டியில் இன்னும் இணைய வில்லை.